சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் பிரபல வணிக நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் பிரபல வணிக நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் வருமான வரிச் சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனங்களில் வரி எய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை காரணமாக அந்த நிறுவன கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.