சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு, சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என சுமார் 200 இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, சசிகலா, 50க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி சுமார் 1,500 கோடி ரூபாய் வரை வரிஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவிற்கு சொந்தமான ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்நிலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர், தற்போது முடக்கம் செய்துள்ளனர். சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post