”இளைஞர் பாசறை கேள்வி பட்டிருப்போம் அது என்ன இன்பநிதி பாசறை” . அட இன்பநிதிய தெரியாமல் இந்தியாவில யாராவது இருப்பாங்களா. இன்பநிதி-னு சொல்றதவிட “இந்தியன் மெஸ்ஸி”னு சொன்னாதான் எல்லாருக்கும் பளீச்-னு பிடிபடும்.
இப்போ ஏன் திடீர்னு இன்பநிதிய பத்தி பேசுறோம் அப்டினா, புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்குற திமுக-காரங்க “இன்பநிதி பாசறை”னு ஒன்ன ஆரம்பிச்சு ஃபயர் விட்டுக்கிட்டு இருக்காங்க. என்னாடா இது மன்னர் காலத்துலதான், அப்பாவுக்கு அப்புறம் பையன், பையனுக்கு அப்புறம் பேரன் அப்படி தொடர்ந்து வாரிசா பதவிக்கு வருவாங்க. இப்போ என்னடானா மக்களாட்சி நடக்குற இந்த காலத்துலயும் வாரிசு அரசியல் செஞ்சிட்டு இருக்கு இந்த விடியா திமுக.
பேரறிஞர் அண்ணாவால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், கருணாநிதியால் தன் மக்களுக்கான கழகமாக மாற்றப்பட்டது. அன்று கருணாநிதி போட்ட வாரிசு விதை தற்போது திமுகவில் விருட்சமாகி வேர்விட்டுள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அரியணை ஏறிவிட்டார், ஸ்டாலினைத் தொடர்ந்து அவரது மகன் உதயநிதி, உதயநிதியைத் தொடர்ந்து அவரது மகன் இன்பநிதி என வாரிசுகளை வளர்த்தெடுக்கும் கட்சியாக திமுக உருவாகிவிட்டது. தொண்டர்களை ஏமாற்றி கட்சிப் பதவிகளை தங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யார் கைக்கும் சென்றுவிடக் கூடாது என்பதில் தீவிர கொள்கையை கடைபிடிக்கிறது திமுக. அதிமுகவைப் போன்று தொண்டர்களால் உருவான கழகமாக இருந்திருந்தால், தொண்டர்களின் கடின உழைப்பும், அதன் மூலம் அவர்கள் தன்னை வளர்த்தெடுப்பதும் தெரிந்திருக்கும். முதலாளிகளாலும், பண்ணையார்களினாலும் உருவாக்கப்பட்டிருப்பதால்தான் திமுக மக்களுக்கு கடமை ஆற்றும் பணியிலிருந்து விலகி பணம் பணம் என்று பொருளைத் தேடி ஓடுவதும், அதற்காக ஊழல் செய்வதிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் விடிவு காலம் நிச்சயம் உண்டு. அப்போது நாட்டில் இரட்டை இலை பறக்கும். கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் சேவை ஆற்றி, பாமரர்களின் துயர் போக்குவர்.
Discussion about this post