திருவள்ளூரில் பூமி பூஜையுடன் தொடங்கிய தூர்வாரும் பணி

பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடலோர பகுதியான பழவேற்காட்டிற்கு உட்பட்ட 35 மீனவ கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆசியாவிலே இரண்டாவது மிகப் பெரிய ஏரியான புலிக்காட் ஏரியும், கடலும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் அடிக்கடி மணல் திட்டு உருவாகி முகத்துவாரம் அடைந்து போகிறது. இதனால் மீன் பிடி படகுகள் தரைதட்டி சேதமடைவதால், முகத்துவாரத்தை தூர்வாரி, நிரந்தர தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 27 கோடி ரூபாய் ஒதுக்கி, அதற்கான பணியை தொடங்குவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தற்காலிகமாக முகத்துவாரம் தூர்வாரும் பணி பூஜையுடன் தொடங்கியுள்ளது.

 

Exit mobile version