ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் பெருநாள் சிறப்புத்தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில், ஈத் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.

நேற்றிரவு வானில் பிறை தெரிந்ததால் உலகில் பல்வேறு நாடுகளில் ஈத் பெருநாள் அறிவிக்கப்பட்டது. வளைகுடா பகுதியில் ஷவ்வால் பிறை தென்பட்டதாக சவூதி அரேபிய அரசு அதிகாரப்பூர்மாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித், துபாயில் உள்ள ஜூமேரா உள்ளிட்ட பெரிய பள்ளிவாசல்கள் மற்றும் பெருநாள் தொழுகைக்காக கட்டப்பட்டுள்ள ஈத்கா மைதானங்களில் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

துபாயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டேரா பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் பெரும்பான்மையான தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கடமையை நிறைவேற்றினர். தொழுகைக்கு பிறகு உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தொழுகை முடிந்தது என்பதன் அறிகுறியாக ஈத்கா மைதானத்தில் சிறிய ரக பீரங்கி குண்டு முழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த அனைவரும், நாடு, மொழி பாகுபாடின்றி, கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Exit mobile version