மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கூட்டணி கட்சிகளோடு இணைந்து அதிமுகவினர் செயல்பட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தேவையான பணிகளை முடுக்கிவிட்டார். பின்னர் பேசிய அவர், ஆட்சிக்கு பல சோதனைகள் வந்தாலும் அனைத்து முறிக்கப்பட்டு சிறப்பாக நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். 

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த 50 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் அக்கட்சியின் வழக்கறிஞர் தியாகராஜன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவுக்கு வரவேற்றார். இக்கூட்டத்தில் வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டார்.

Exit mobile version