கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக, உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் 6 அமர்வுகளில் மட்டுமே வழக்குகளின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கத்தை குறைக்கு வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமர்வுகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை விசாரிக்கும் 6 அமர்வுகள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் 12 அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், நீதிமன்ற ஊழியர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல் உள்ள யாரும் நீதிமன்றத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post