தமிழகத்தில் கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் இயல்பை விட 4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பான அளவை விட வெயில் அதிகரிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்குள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post