பொள்ளாச்சி ஆழியாறு அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் உள்ளதால், கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சேமிக்கப்படும் தண்ணீர் பொள்ளாச்சி, கோவை போன்ற பகுதிகளுக்கு குடிநீருக்காகவும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சரியான பருவ மழை இல்லாததால் ஆழியாறு அணை குளம் போல் காட்சி அளித்தது. கடந்த ஆண்டு தமிழக அரசின் குடிமராமத்து பணியின் மூலம் ஆழியாறு அணை தூர்வாரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதங்களில் பெய்த மழை காரணமாக தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியது. மழை குறைந்து காணப்பட்டாலும் அணையில் 100 அடிக்கும் குறையாமல் தண்ணீர் இருந்து வருகிறது. இதனால், கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வராது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Discussion about this post