சென்னையில் சில இடங்களில் நிலஅதிர்வு-மக்கள் அச்சம்

வங்கக்கடலில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவான, இந்த நிலநடுக்கதால், சென்னையின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

வங்கக் கடலில் இன்று காலை 7 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் சென்னைக்கு வடமேற்கே 609 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்ததாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 456 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சென்னையின் சில இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நில அதிர்வு குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்களது கவலையை பகிர்ந்தனர். இந்த நில அதிர்வு 2004ல் ஏற்பட்ட சுனாமி மற்றும் 2002ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நினைவு படுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நில அதிர்வால் பொருட்சேதமோ உயிர்ச் சேதமோ எற்பட்டதாக தகவல் இல்லை.

Exit mobile version