சேலத்தில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு தொழிலதிபர்களிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த தொழிலதிபர்கள் ஸ்டாலின் மற்றும் பிரவீன் ஆகியோரிடம் சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் தங்களிடம் இரிடியம் உள்ள அரிய பொருள் உள்ளதாக கூறி ரூபாய் 50 லட்சம் வரை பணம் பறித்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபர்கள் இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தனர்.
தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சரவணன், சிவக்குமார், தினேஷ் உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம், 2 கார்கள் மோசடிக்கு பயன்படுத்திய பிரத்யேக உடைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் மூவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Discussion about this post