நாகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயர விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நீலாதாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் 20 க்கும் மேற்பட்ட வண்ணமயமான மின் அலங்கார விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தன. மேலும் ஊர்வலத்தின் போது கரகாட்டம், தப்பாட்டம் போன்ற கலைஞர்களின் ஆட்டத்துடன் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.