மகாராஷ்டிரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கச் சட்டம் நிறைவேற்றப்படும் என அந்த மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் பகத்சிங் கோசியாரி உரையாற்றினார். அப்போது, வேலையின்மை அதிகரித்து வரும் சூழலில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்தார். பத்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் எனவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். அந்த மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post