ஜெர்மனியில் ஐம்பொன்னால் ஆன இரண்டு திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளதையொட்டி, அதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
ஜெர்மனி நாட்டில் உள்ள பாடன் உர்ட்டன்பெர்க் மாநிலத்தில் ஸ்டுட்கார்ட் நகரத்திலுள்ள லண்டன் அரசு அருங்காட்சியகத்தில் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட இரண்டு திருவள்ளுவர் சிலைகள் டிசம்பர் 4ஆம் தேதி அமைக்கப்பட உள்ளன. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் 40கிலோ எடை மற்றும் 3 அடி நீளம் கொண்ட ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலையை அமைச்சர் பாண்டியராஜன் திறந்து வை2த்தார். மேலும் 35 கிலோ எடை கொண்ட 1.5 அடி நீளம் கொண்ட மற்றொரு திருவள்ளுவர் சிலையும் லண்டன் அருங்காட்சியகத்தில் அமைக்கப்படவுள்ளது.
Discussion about this post