துபாயில், செல்போனில் பதட்டமாக பேசியபடி கார் ஓட்டிய பெண், பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், கார் கடலுக்குள் சீறிப் பாய்ந்தது.
துபாயில் வசித்து வரும் 41 வயது பெண்மணி, அவருடைய காரில் அல் மம்சார் கடற்கரைக்கு சென்றுள்ளார். கடற்கரையின் முகப்பில் உள்ள கார் நிறுத்ததில் நின்று கொண்டிருந்த அவருக்கு, செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. செல்போனை எடுத்து பேசிய பின் பதற்றமான நிலையில் காணப்பட்ட அவர், காரின் பிரேக்கை பிடிப்பதற்கு பதிலாக, ஆக்சிலேட்டரை மிதிக்கவே, கண் இமைக்கும் நேரத்தில் கார் கடலுக்குள் சீறிப்பாய்ந்தது. காரிலிருந்து வெளியேறிய பெண், 90 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்த மக்கள், உடனடியாக காவல்துறைக்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் நீர் மூழ்கி வீரர்கள், பெண்ணை மீட்டு கரை சேர்த்தனர். விபத்தில் பெண் அதிஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
Discussion about this post