சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்துள்ளது

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை அய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. காலையில் பெய்த இந்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் இந்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Exit mobile version