சென்னை அசோக்நகரில் திருவீதி அம்மன் ஆலயத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது

சென்னை அசோக்நகர் பகுதியில் இருக்கும், பிரசித்தி பெற்ற திருவீதி அம்மன் ஆலயதில் கொள்ளை சம்பவத்தில் இடுப்பட்ட கொள்ளையர்களை காவல்துரையினர் கைது செய்தனர்…

சென்னை அசோக்நகர் 35 ஆவது பிரிவில் பிரசித்தி பெற்ற திருவீதி அம்மன் என்கிற ஆலயம் உள்ளது. அந்தப் பகுதி மக்களுக்கு புகழ் பெற்ற ஆலயமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அம்மன் மீது சாத்தப்பட்ட இருந்த ஒரு சவரன் தங்க தாலி மற்றும் உண்டியலை உடைத்து 12 ஆயிரம் ரூபாய் சில்லறை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து இந்த கொலைச் சம்பவத்தை நிகழ்த்திவிட்டு வடபழனி வழியாக வந்துள்ளனர்…

உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் உத்தரவின் பேரில் அதிகாலை 3 மணி அளவில் வடபழனி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் கண்ணன் உதவி ஆய்வாளர் ரவி உள்ளிட்ட காவலர்களிடம் அந்த கொள்ளை கும்பல் சிக்கியுள்ளது. இருசக்கர nவாகனத்தில் வந்த கொள்ளை கும்பலை மடக்கி பிடித்த போது ஒருவன் தப்பித்துவிட இரண்டு பேரை கைதுசெய்தனர் காவல்துறையினர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய், வடபழனி அகிலேஷ் என்றும் தெரியவந்தது. தப்பியோடிய ஆசிப் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கொள்ளையன் விஜய் மற்றும் அகிலேஷ் நேரடியாக கோயிலுக்கு அழைத்துச் சென்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கோயில் அருகே இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்துச் செல்வது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். கொள்ளை அடிக்கப்பட்ட அரை மணி நேரத்தில் குற்றவாளிகள் இருவரை கைது செய்த வடபழனி காவல் துறை உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் ரவி ஆகியோரை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித் துள்ளார்…

Exit mobile version