அமராவதி அணையில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளது

அமராவதி அணையில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளதால், திருப்பூர் பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதுதவிர தாராபுரம்,வெள்ளக்கோவில், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் , நூற்றுக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அமராவதி அணையில் தற்போது, மொத்த கொள்ளளவான 90 அடியில், 26 அடி நீர் மட்டுமே இருப்பு உள்ள நிலையில், இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு மாதத்தில் அமராவதி அணை முற்றிலும் வறண்டு போக கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

Exit mobile version