தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவனே மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த அங்காளஈஸ்வரி என்பவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த முத்துக்கண்ணன் என்பவருக்கும் கடந்த இருபது வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். முத்துக்கண்ணன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். முத்து கண்ணனுக்கும் அவரது மனைவி அங்காள ஈஸ்வரி க்கும் கருத்து வேறுபாடு காரணமாக சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அங்காளஈஸ்வரி தனது தந்தையான கணேசன் அவர்கள் வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் முத்து கண்ணன் நேற்று மாலை சீலைபட்டியில் அங்காளஈஸ்வரி வசித்து வந்த அவரது தந்தை வீட்டிற்கு சென்று அங்காள ஈஸ்வரி இடம் தனது மகன்கள் தன்னிடம் பேசுவதில்லை எனவும், அதற்கு காரணம் நீயும் உன் குடும்பத்தாரும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் முத்துக்கண்ணன் அருகே இருந்த கத்தியை கொண்டு அங்காள ஈஸ்வரி தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அங்காள ஈஸ்வரியை அருகே இருந்த அவரது உறவினர்கள் உடனடியாக
சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அங்காள ஈஸ்வரி உயிரிழந்தார். இதனையடுத்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவான முத்துக்கண்ணணை தேடி வருகின்றனர். கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post