பெண் விமானியான முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனுபிரியா என்பவர் பெற்றுள்ளார்.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மால்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 27 வயதே ஆன அனுபிரியா தனது 23 வது வயதில் இருந்து, விமான பயிற்சியை மேற்கொண்டு வந்தார். தற்போது, பயிற்சி முடித்து விமானி ஆகியுள்ள அனுபிரியாவுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முன்னுதாரனமாக அனுபிரியா திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமானி அனுபிரியாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.