திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று கிராமசபை கூட்டத்தை நடத்திவருகிறார். அண்மையில் விருதுநகர் தெற்கு மாவட்ட கிராமசபை கூட்டத்தில் ஒரு குழந்தை ஸ்டாலினை ‘தாத்தா’ என்று அழைத்ததற்கு ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளாமல், அதை மறுத்து நான் ‘தாத்தா’ இல்லை ‘மாமா’ என்று கூறினார். மக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை எடுத்துக்கொள்ளாமல், அவருக்கு எது நலன் அளிக்கிறதோ அதை மக்களுக்கு திணிக்க முற்படுவார். இதுதான் அவரது அரசியல். இதனை அந்த குழந்தையிடம் காட்டியது குழந்தைத்தனமானது.
அந்த குழந்தை ‘ஸ்டாலின் தாத்தா’ என்று கூறுவதில் எந்த தவறுமில்லை, வீட்டில் அவரது பேரக்குழந்தைகள் இவரை ‘தாத்தா’ என்று அழைப்பதில்லையா?, ஏன் அவரது வயது முதிர்ச்சியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?.. இது தான் இவரது குணம்… இவரது வயது முதிர்ச்சியை நாம் பொது மேடைகளில் அடிக்கடி காணலாம்… ஆனால் அறிவு முதிர்ச்சியடையவில்லை என்றே தோன்றுகிறது . பெயர்களை மாற்றி சொல்வது, பேசும் போது அடுத்த என்ன பேசுவது என தெரியாமல் திணறி நிற்பது, பழமொழிகளை மாற்றிச்சொல்வது போன்ற நிகழ்வுகள் நமக்கு தெரிந்தது தான். இவை அனைத்தும் இவரது வயது முதிர்ச்சியை மட்டுமல்ல அவரின் நியாபகத்தின் திறமை மங்கிவருவதாகவே கருதப்படுகிறது
என்னத்தான் அவர் இளமையாய் இருக்குராருன்னு காட்டிக்கொண்டாலும் “கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்”…!
கிராம சபை என்ற பெயரில் ஸ்டாலின் காசு கொடுத்து ஆட்களை திரட்டிக்கொண்டு வருகிறார். “இவரே பாம் வைப்பராம். அப்புறம் இவரே எடுப்பாராம்” சினிமாவில் ஒரு படத்தில் வரும் வசனம் போல உள்ளது இவரது கிராம சபை கூட்டம். போன தேர்தலுக்கு நமக்கு நாமே என்று சொல்லி தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இப்போது கிராம சபை என்று போய்க்கொண்டு இருக்கிறார். இதுவும் இவருக்கு கைக்கொடுக்க போவதில்லை என்பது ஊரறிந்த செய்தி. ஏனெனில் கிராம சபை கூட்டத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் அவமானங்களை சந்தித்து வருகிறார்.
“கெட்டப்ப மாத்துனாலும் கேரக்டரை மாத்த மாட்டிக்கிறாரு”ன்னு மக்களுக்கு மட்டும் இல்ல….இந்நேரம் அந்த குழந்தைக்கும் புரிஞ்சிருக்கும்…
Discussion about this post