இலங்கை, திருகோணமலை கிண்ணியா கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
திருகோணமலை கிண்ணியா கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு பேர் கடலில் குதித்தனர். கடலில் குதித்தவர்களை நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அங்கு திரண்ட பொதுமக்கள் கடற்படையினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 12 கடற்படை வீரர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில் தொடர்ந்து காணாமல் போனோரை கண்டுபிடிக்க முடியாததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Discussion about this post