இசை உலக ஞானிக்கு இன்று பிறந்தநாள்…

இளையராஜா… தமிழ் இசை உலகிற்கு கிடைத்த வரம்… 1943ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராமசாமி-சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்… சிறு வயது முதலே இசையின் மீது கொண்ட அளாதி பிரியத்தால் அத்துறைக்காகவே தனது வாழ்நாள் முழுவதும் அற்பணித்துக் கொண்டுள்ளார். எடுத்த எடுப்பிலேயே இசை உலகின் ராஜாவாக ஆகிவிடவில்லை இளையராஜா… பல கஷ்டங்களை கடந்து முதன் முதலில் 1976ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய “மச்சானைப் பாத்தீங்களா..” என்ற பாடல் அன்றைய சூப்பர் ஹிட்…

பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கர்நாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்ற பாடல்கள் இவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா.

சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டதின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றார்.ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர், இளையராஜாவின் கீதாஞ்சலி என்ற பக்தி இசைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். ஆதி சங்கரரின் மீனாட்சி ஸ்தோத்திரம் என்ற பக்தி பாடலுக்கு இசையமைத்துள்ளார். மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கு தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து மக்களை பரவசப்படுத்தினார் இளையராஜா..

இசை உலகிற்கு ஆற்றிய தொண்டு இவருக்கான அங்கீகாரத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பெற்றுக்கொடுத்தது.

தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளும் இளையராஜாவின் கரங்களை அழங்கரித்துள்ளன…

Exit mobile version