ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஐஐடி வாளாகத்தில் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாநகர காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித் இருப்பதாகவும், விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் மெஸ்லினா, உதவி ஆணையர் பிரபாகரன் மற்றும் ஆய்வாளர் ஜெயபாரதி ஆகியோர் விசாரணை நடத்த உள்ளனர். முதல் கட்டமாக ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.
Discussion about this post