மறுவாக்குப்பதிவு நடைபெறும் 67-வது பூத்தில் ஐ.ஜி. சண்முகவேல்ராஜன் ஆய்வு

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மறுவாக்குப்பதிவு நடைபெறும் 67-வது பூத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை ஐஜி சண்முகவேல்ராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம், ஜி.கல்லுப்பட்டி மற்றும் பிராதுகாரன்பட்டியில், தேனி நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மறுவாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தென்மண்டல ஐஜி சண்முகவேல்ராஜன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன், 67-வது வாக்குச்சாவடியில் ஆய்வு நடத்தினார்.

அப்போது வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Exit mobile version