கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி – ICMR பரிந்துரை

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த ஐ சி எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஐ சி எம் ஆர் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் கர்ப்பிணி பெண்கள் கோவிட் நிமோனியாவால் மூச்சுத்திணறலால் உயிரிழப்பது தெரியவந்தது. எனவே கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாலூட்டும் தாய்மார்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்த மத்திய அரசு, மகப்பேறு மருத்துவர்களின் கோரிக்கையை முன்வைத்து இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது.

 

Exit mobile version