4 நாட்கள் மட்டுமே கொண்ட சர்வதேச டெஸ்ட் போட்டிகளை நடத்த, ஐசிசி பரிசீலனை

4 நாட்கள் மட்டுமே கொண்ட சர்வதேச டெஸ்ட் போட்டிகளை நடத்த, ஐசிசி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை டெஸ்ட் போட்டிகளிலும் அதிகரிக்க ஐசிசி பல்வேறு யோசனைகளை பரிசீலித்து வருகிறது. அதன்படி, 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களில் நடத்த ஐசிசி பரிசீலித்து வருகிறது. முதல் தர போட்டிகள் போல், 4 நாட்கள் மட்டும் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளால் ரசிகர்கள் கவர முடியும் என ஐசிசி கருதுகிறது. அதன்படி, 4 நாட்கள் மட்டும் டெஸ்ட் போட்டி நடைபெற்றால், நாள் ஒன்றுக்கு 98 ஓவர்கள் வீசப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஆனால், அவ்வாறு நடைபெற்றால் பெரும்பாலான போட்டிகளின் முடிவு கிடைக்காமல் போகும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆயினும், விரைவில் இதுகுறித்து தெளிவான முடிவு அறிவிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Exit mobile version