ஐசிசி டெஸ்ட் தரவரிசை – பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தொடர்ந்து முதலிடம்

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அண்மையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, அணிகளின் தரவரிசையில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 5 வது இடத்திலும் நீடிக்கிறது.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், 920 புள்ளிகளுடன் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி, சதம் விளாசிய புஜாரா 846 புள்ளிகள் பெற்று, 5 வது இடத்திலிருந்து, 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், தென் ஆப்பிரிக்காவின் ரபடா முதலிடத்திலும், இந்தியாவின் ஜடேஜா 5 வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின், 786 புள்ளிகள் பெற்று, 7-வது இடத்திலிருந்து, 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல், ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ஜடேஜா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Exit mobile version