50 ஓவர் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு! கோப்பை வெல்லுமா இந்தியா?

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்தப் போட்டிகளானது அகமதாபாத்தில் தொடங்கி அகமதாபாத்திலேயே முடிவடைகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கூட இதே போலதான் அகமதாபாத்திலே தொடங்கி முடிவடைந்தது. இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதால் இந்திய ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

முதல் போட்டியே இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் சந்தித்துக் கொள்கின்றன. அக்டோபர் 5ல் தொடங்க உள்ள இந்தப் போட்டியானது நவம்பர் 19 ஆம் தேதி முடிவடைகிறது. கிட்டத்தட்ட கிரிக்கெட் ரசிகரகளுக்கு ஒன்றரை மாதம் திருவிழாதான் என்று சொல்லலாம். ஆனால் இந்தப் போட்டிகளில் பலப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

போட்டியின் அட்டவணையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

 

England vs New Zealand October 5 Ahmedabad
Pakistan vs Qualifier 1 October 6 Hyderabad
Bangladesh vs Afghanistan October 7 Dharamsala
South Africa vs Qualifier 2 October 7 Delhi
India vs Australia October 8 Chennai
New Zealand vs Qualifier 1 October 9 Hyderabad
England vs Bangladesh October 10 Dharamsala
India vs Afghanistan October 11 Delhi
Pakistan vs Qualifier 2 October 12 Hyderabad
Australia vs South Africa October 13 Lucknow
England vs Afghanistan October 14 Delhi
New Zealand vs Bangladesh October 14 Chennai
India vs Pakistan October 15 Ahmedabad
Australia vs Qualifier 2 October 16 Lucknow
South Africa vs Qualifier 1 October 17 Dharamsala
New Zealand vs Afghanistan October 18 Chennai
India vs Bangladesh October 19 Pune
Australia vs Pakistan October 20 Bengaluru
England vs South Africa October 21 Mumbai
Qualifier 1 vs Qualifier 2 October 21 Lucknow
India vs New Zealand October 22 Dharamsala
Pakistan vs Afghanistan October 23 Chennai
South Africa vs Bangladesh October 24 Mumbai
Australia vs Qualifier 1 October 25 Delhi
England vs Qualifier 2 October 26 Bengaluru
Pakistan vs South Africa October 27 Chennai
Qualifier 1 vs Bangladesh October 28 Kolkata
Australia vs New Zealand October 28 Dharamsala
India vs England October 29 Lucknow
Afghanistan vs Qualifier 2 October 30 Pune
Pakistan vs Bangladesh October 31 Kolkata
New Zealand vs South Africa November 1 Pune
India vs Qualifier 2 November 2 Mumbai
Qualifier 1 vs Afghanistan November 3 Lucknow
England vs Australia November 4 Ahmedabad
New Zealand vs Pakistan November 4 Bengaluru
India vs South Africa November 5 Kolkata
Bangladesh vs Qualifier 2 November 6 Delhi
Australia vs Afghanistan November 7 Mumbai
England vs Qualifier 1 November 8 Pune
New Zealand vs Qualifier 2 November 9 Bengaluru
South Africa vs Afghanistan November 10 Ahmedabad
India vs Qualifier 1 November 11 Bengaluru
England vs Pakistan November 12 Kolkata
Australia vs Bangladesh November 12 Pune
Semifinal 1 November 15 Mumbai
Semifinal 2 November 16 Kolkata
Final November 19 Ahmedabad

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்திய அணிக்கு மொத்தம் உள்ள 9 போட்டிகளில் ஐந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடைபெற இருக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அக்டோபர் 08

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அக்டோபர் 15

இந்தியா மற்றும் நியூசிலாந்து அக்டோபர் 22

இந்தியா மற்றும் இங்கிலாந்து அக்டோபர் 29

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நவம்பர் 06

இந்த ஐந்து போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறுகிறது.

ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கப் போகும் இந்திய அணி கோப்பையை வென்று வெற்றிக் கொடி நாட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version