தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதலவர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த அமுதா, உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத்துறை செயலாளராகவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.