வளர்ச்சியடைந்த மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற பாடுபடுவேன்: தமிழிசை

வளர்ச்சியடைந்த மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற பாடுபடுவேன் என்று தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளருமாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி இனாம்மணியாச்சி, லெட்சுமில் காலனி, கிருஷ்ணநகர், சாலைப்புதூர், ஆலம்பட்டி, நாலாட்டின்புதூர், வில்லிசேரி உள்ளிட்ட பகுதிகளில் தமிழிசை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரும் உடன் பிரசாரம் செய்தனர். அப்போது பேசிய தமிழிசை, தூய்மையான, வளர்ச்சியடைந்த, தொழில்முனைவோர் அதிகளவு கொண்ட நகரமாக தூத்துக்குடியை மாற்ற பாடுபடுவேன் என்றார்.

கனிமொழி போன்று இன்னாரு மகள், இன்னாரு தங்கை என்பதற்காக பதவியை தான் பெறவில்லை என்று குறிப்பிட்ட அவர், கட்சியில் உழைத்து தலைவராகி இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version