சென்னை தாம்பரம் அடுத்த தனியார் பொறியில் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பிற்கான ரவுத்திரம் என்ற திறன் பேசி செயலியை மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் திறந்து வைத்தார்.
பின்னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், திரைத்துறைக்கு வரும் நடுத்தர பெண்கள் தங்கள் திறமையை நம்பி முழுமையான பயிற்சி பெற்று வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திரைத்துறையில் ஈனச்செயலில் ஈடுபடுபவர்களே தங்கள் பிள்ளைகளை சினிமாவில் அனுமதிக்க தயங்குவார்கள் என குறிப்பிட்ட அவர், ஆனால் நான் என் தொழிலை தெய்வமாக நினைப்பதால் என் மகள்களை இத்துறையில் அனுமதித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post