ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அழகான ஜம்மு காஷ்மீர், நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரிய இடமாக இருந்து வருவதாக தெரிவித்தார். இந்துக்கள், இஸ்லாமியர்கள் இணைந்து வாழ விருப்பம் இல்லாத பகுதியாக ஜம்மு காஷ்மீர் உள்ளதாக கூறிய டிரம்ப், இந்த பிரச்னையில் சுமுக தீர்வு காண்பது என்பது இயலாத காரியம் என்றார். தேவைப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கவோ அல்லது தன்னால் முடிந்த உதவிகளை செய்யவோ முயற்சிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் பிரச்னை குறித்து பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தொலைப்பேசியில் பேசியதாக டிரம்பர் தெரிவித்தார். பிரதமர் மோடியுடன் ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளும் போது, அவரிடம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண முயற்சி செய்வேன் என்றும் அமெரிகக் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
Discussion about this post