காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளில் சேரப்போவதில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட போவதாக கூறினார். தொடர்ந்து பேசிய பிரகாஷ்ராஜ் தற்போதுள்ள பெரும்பாலான எம்.பிக்கள் தொழிலதிபர்களாக உள்ளார்கள் என்றும், அவர்களுக்கு மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு செயலாற்ற தெரியவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
Discussion about this post