நீங்கள் இல்லத்தரசியா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்!

chennai highcourt

மனித சமூகத்தின் ஒரு முக்கியக் கூறாக இருந்துவருவது குடும்ப அமைப்பு. குடும்பம் என்று எடுத்துக்கொண்டால் கணவன், மனைவி, மக்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதிலும் மனைவியான குடும்பத்தலைவியின் சேவை என்பது தலையாயக் கடமையாக இருந்துவருகிறது. ஒரு குடும்பத்தின் நிர்வாக கட்டமைப்பானது மனைவியிடமே உள்ளது. அதனைத் தவிர்த்து கணவனுக்கும், பிள்ளைகளுக்கு மனைவி செய்யும் சேவைகளுக்கு சம்பளம் என்று எதுவும் இல்லை. ஆனால் மனைவி வீட்டில் சரியான நிர்வாகத்தினை கைகொண்டிருப்பதால்தான் கணவனால் வீட்டிற்கு வெளியே பொருளீட்ட முடிகிறது.

மனித இனம் தோன்றி அது நாகரிக மாற்றம் அடைந்த பிறகு தாய்வழிச் சமூகம்தான் முதலில் உருவானது. பெண்ணைச் சுற்றியே அன்றையக் குடும்ப அமைப்பான கட்டமைக்கப்பட்டது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்ணே எடுத்தார். தனக்கான ஆண் மகனை தேர்வு செய்வதிலும் பெண் முன்னுரிமை கொண்டவராக இருந்தார். பொருளாதாரமும் பெண்களிடமே இருந்துவந்தது. காலச் சுழற்சியில் பல கருதுகோள்களும் அதிகாரங்களும் பெண்ணிடமிருந்து படிப்படியாக மாறி ஆண் வர்க்கத்திற்கு சொந்தமானது. அதிலிருந்து பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பெண் அடிமைத்தனமானது ஓங்கி வளர ஆரம்பித்தது. பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய பெண்கள் அடுப்பங்கரைக்குள் அடங்கி ஒடுங்கிவிட்டனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபத்தோறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் சிறிது சிறிதாக எழுச்சிக் கொள்ள ஆரம்பிவித்துவிட்டனர். தற்போது சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர். தங்களுடைய பொருளாதார தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்யும் முறையை லாவகமாக கைகொள்ளத் துவங்கிவிட்டனர்.

இப்படி மாறி வரும் காலக்கட்டத்தில் பெண்கள் இன்னும் ஆங்காங்கே சில இன்னல்களுக்கு ஆளாகியும் வருகிறார்கள். தற்போது அப்படி ஒரு கஷ்டப்படும் பெண்களுக்கு அடித்தது ஆஃபர் என்பது போல சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. “ கணவன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்கள் என்றாலும், இல்லத்தரசியாக இருந்து மறைமுக பங்களிப்பை வழங்கிய மனைவிக்கும், சம பங்கு உண்டு” என, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவுக்கு காரணம், கடலூரை சேர்ந்த கண்ணையன் என்பவர் அவர் மனைவி மீது அளித்த தனிநபர் மனுதான். கண்ணையன் தன் மனைவி கம்சலாவுடன் நெய்வேலியில் வசித்துவந்தார். 1982 காலக்கட்டத்தில் வெளிநாட்டில் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பியுள்ளார். அவரின் மனைவி வடலூர், சிதம்பரத்தில் சொத்துக்களை வாங்கியிருக்கிறார். கடந்த 1994 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய கண்ணையன் தன் சொத்ஹ்டுக்களை விற்க அதிகாரம் அளித்து, “பவர் ஆப் அட்டர்னி” ஓருவரை மனைவி நியமித்து இருப்பதை அறிந்து அதிர்ச்சியாயிருக்கிறார்.

பதறி அடித்து சிதம்பரம் முன்சிப் நீதிமன்றத்தில் சொத்துக்களை விற்க தடை கோரி வழக்கு தொடர்ந்தார் கண்ணையன். சொத்துக்கள் அனைத்தும் கண்ணையன் சம்பாதித்தது அவரது மனைவிக்கு சொத்தை விற்க உரிமையில்லை என்று முன்சீப் நீதிமன்றம் உத்தரவு இட்டது. பிறகு அவரது மனைவி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையொட்டி, முன்சீப் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பிறகு கண்ணையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் காலாமாகிவிட்டார். அவரது வாரிசுகள் இந்த வழக்கை எடுத்து நடத்தத் துவங்கினார்கள். மனைவி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குள்ளஞ்சாவடியில் தந்தை அளித்த 2 ஏக்கருக்கு மேலான நிலத்தில் , 1 ஏக்கரை என் கணவர் விற்றுவிட்டார் என்றும் வெளிநாட்டிற்கு செல்ல என் நிலம் ஒன்றினை விற்று பணம் கொடுத்தேன் என்றும், நகைகளை விற்றும், நிலம் வாயிலாக வந்த வருமானத்திலும் சொத்துக்களை வாங்கினேன் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு என்னவெனில், சொத்துக்களை வாங்க மனைவியின் பங்களிப்பு நேரடியாக இல்லை என்றாலும், வீட்டை குடும்பத்தை கவனித்துக் கொண்டதன் வாயிலாக மறைமுக பங்களிப்பை வழங்கி உள்ளார். குடும்பத்தை அவர் கவனித்துக் கொண்டதால், கணவரால் வேலை பார்க்க முடிந்தது. குடும்பத்துக்காக பணத்தை சேமித்து சொத்துக்களை வாங்க முடிந்தது. குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் 24 மணி நேரத்தையும் மனைவி செலவிடுகிறார். இதை குறைத்து மதிப்பிட முடியாது. அதேபோல மனைவி பெயரில் சொத்து வாங்கப்பட்டிருப்பதற்கான உரிமை ஆவணம் இருப்பதால், மனைவியும் சொத்தினை முழுமையாக சொந்தம் கொண்டாட முடியாது. எனவே கணவரின் சொத்தில் மனைவிக்கு சமபங்கு மட்டும் உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார்.

Exit mobile version