ஈரோடு அடுத்த திண்டல் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் அரை மணி நேரத்தில் போக்குவரத்து உடனடியாக சரி செய்யப்பட்டது.
ஈரோட்டு மாவட்டத்தில் கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திண்டலில் திடீரென சூறாவளிக்காற்று வீசியது. இதில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் மரங்கள் அகற்றப்பட்டு அரை மணி நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.