சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏன்? என்று திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், நான்கு வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பள்ளி வேனின் பெண் உதவியாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜாமின் வழங்கினார். இதனை எதிர்த்து மாணவரின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் எதன் அடிப்படையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post