வீட்டு வரி மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்படும் – முதலமைச்சர்

ஓசூரில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார். ஓசூர் தர்கா பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், கேபிள் கட்டணம் குறைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம் என ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சூளகிரியில் கே.பி. முனுசாமியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்காக நீர் மேலாண்மை திட்டம் மற்றும் காவிரி பிரச்சனை அதிமுக அரசு தீர்வு கண்டுள்ளதாக கூறினார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர், திமுக கூட்டணி குழப்பமான கூட்டணியாக உள்ளதாகவும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை எனவும் விமர்சித்தார். சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகம் மருத்துவத்துறையில் சிறந்த மாநிலமாக திகழ்வதாக கூறிய முதலமைச்சர், ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version