தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு சில இடங்களில் அனல்காற்று வீசும் என்று எச்சரித்திருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம், ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி வெயிலின் தாக்கமும் கோடை மழையின் குளிர்ச்சியும் இணைந்தே மக்களை நனைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் எனவும், பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.