ஹாங்காங்கில், சீன வன்முறை கும்பலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீன ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹாங்காங் அரசுக்கு எதிராக கடந்த 7 வாரங்களுக்கும் மேல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நகரின் யுவென் லாங் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் மீது வெள்ளை சட்டை அணிந்து வந்த ஒரு கும்பல் பிரம்பு மற்றும் இரும்புத் தடிகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கியது. இதில் 45 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய சீன ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வன்முறைக் கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டங்கள் நடத்துவதற்குத் அரசு தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுவீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

Exit mobile version