குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதா நிறுத்திவைப்பு: ஹாங்காங்

 

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில், அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாக தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வரும் நிலையில், குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திருத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு ஹாங்காங் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இதுவரை இல்லாத அளவில் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் மசோதாவை நிறுத்தி வைப்பதாக ஹாங்காங் அரசு அறிவித்தது.

ஆனாலும் மசோதாவை திரும்பப்பெறும் வரையில் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் கூறிய நிலையில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார். சர்ச்சைக்குரிய அந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் இதனை நம்ப மறுப்பதாலேயே போராத்தில் ஈடுபடுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் தங்களது கோரிக்கைகளை நிர்வாக தலைவர் கேரி லாம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் இதனால், போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version