உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 2500 சதுர அடி பரப்பளவில் இருக்கும் நிலத்தில் 1200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் வீடுகளுக்கு கள ஆய்வின்றி அனுமதி வழங்கும் நடைமுறைக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-18 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், உள்ளாட்சிப் பகுதிகளில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்தார். அதனை செயல்படுத்தும் விதமாக, அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், மற்றும் 528 பேரூராட்சிகளில், இதுவரை முறைப்படுத்தப்பட்ட 22 ஆயிரத்து 281 மனைப்பிரிவுகளில், அங்கீகரிக்கப்பட்ட 1 லட்சத்து 82 ஆயிரத்து 957 மனைகளின் உரிமையாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
* விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பிக்கப்படவேண்டும்
* அனுமதி பெற்ற மனைப் பிரிவுகளில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு மட்டுமே
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
* பதிவுபெற்ற பொறியாளரின் உறுதிமொழி ஆவணம், வரைபடங்கள், கட்டட மனைக்கான
உரிமை குறித்த ஆவணம் ஆகியவற்றுக்கான நோட்டரி பப்ளிக் சான்று இணைக்கப்பட வேண்டும்.
* தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் இணைப்பு 17ல்
குறிப்பிட்ட இடங்களுக்கு அனுமதி வழங்க இயலாது
* கட்டடத்தின் உறுதி தன்மைக்கும் இதர பாதுகாப்பு வசதிகளுக்கும் மனுதாரரால்
நியமிக்கப்பட்ட பொறியாளரே பொறுப்பு
* விதிகளை மீறுதல் மற்றும் தவறான ஆவணங்களை சமர்பித்தலோ கட்டட அனுமதி ரத்து செய்யப்படுபடுவதுடன், சம்மந்தப்பட்ட பொறியாளரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் வழிமுறைகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, புதிய வணிக உரிமம் பெறுதல் அல்லது புதுப்பித்தல், பெயர் மாற்றம் சேவை போன்ற அனைத்து சேவைகளுக்கும் இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலம், வீடு கட்டுவோர் அலைகழிக்கப்படாமல், இணைதளத்தின் மூலம் அனுமதி பெறுவதால், அவர்களின் நேரம், பணம் என அனைத்தும் சேமிக்கப்படுத்தப்படுகிறது.
Discussion about this post