உலகையே உலுக்கிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு ஒரு விலங்கைப் பார்த்தல் பயந்து கொலையே நடுங்கி விடுமாம். நீங்கள் நினைப்பதுபோல அது சிங்கமோ, புலியோ கிடையாது. மியாவ் மியாவ் என்று நம்மவர்களின் காலைச் சுற்றி வரும் பூனைதான் அவருக்கு பயமாம். உலகையே தனக்கு கீழ் வைத்திருக்க எண்ணிய ஹிட்லருக்கு மட்டுமே பூனை பயம் இல்லை. நம்மில் சிலருக்குமே பூனைக் குறித்தான பயம் ஒன்று உண்டு. இந்த பயத்திற்கு ஆங்கிலத்தில் Ailurophobia என்று பெயர்.
Ailurophobia என்றால் என்ன?
அலியுரோபோபியா என்பது பூனையினைப் பார்த்து பயப்படும் ஒருவகை நோயாகும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் பூனையைப் பார்த்தாலே ஒருவித பதட்டத்தை அடைவார்கள். அவர்களுக்கு வியர்வை அதிகமாக சுரந்து மூச்சுத் திணறல் ஏற்படும். அவர்களை பொறுத்தவரை பூனை ஒரு அருவருக்கத்தக்க விலங்கினம். இந்த வகை பூனை பய உணர்வு நோயினை gatophobia, elurophobia, felinophobia, cat phobia என்று நான்கு வகையாக பிரிக்கலாம்.
இந்நோயின் அடிப்படைக் கூறு என்ன?
இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் இளம் பிராயத்தில் பூனையால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அதாவது பூனையிடம் கடி வாங்கியிருக்கலாம், நகக்கீறல்களால் காயப்பட்டிருக்கலாம் போன்ற சில விசயங்களால் பூனையிடம் சில அந்நியத்தை கொண்டிருப்பார்கள். சிறிய வயதில் நாம் ஏதாவது பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டால் அது ஆழமாக பதிந்துவிடும். மேலும் அது நம்முடைய வளர் பருவத்திலும் தொடரும். பின்னர் வயதான காலம் வரையிலும் அது நீடிக்கவும் கூடும். அதிலிருந்து சிலர் மீளலாம். ஆனால் பெரும்பாலானோர் மீள முடியாமல் தவிப்பர். அப்படி மீள முடியாமல் தவிப்பவர்களின் வரிசையில் இந்த அலியுரோபோபியா நோயாளிகளும் உள்ளனர்.
பூனை ஒரு பேய் :
எகிப்து நாகரீக காலக்கட்டதில் பூனையானது அவர்களின் பிரதான தெய்வமாகும். எகிப்தில் இன்றும் பூனை வடிவமைப்பில் பிரமிடுகள், கட்டிடங்கள் போன்றவை உள்ளன. இன்று வரை அவர்கள் பூனையைக் கடவுளாக பாவித்து வருகின்றனர். மறுமலர்ச்சி காலக்கட்டத்தில் தான் பூனையை உலக மக்கள் சற்று வெறுக்கத் தொடங்கினர். அதுவும் கருப்பு நிற பூனையை டெவில் என்றுதான் அழைத்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு பூனை மீதும், கருப்பு நிறத்தின் மீதும் ஒரு வித அருவருப்பு இருந்தது. முக்கியமாக பூனையின் கண்களை பார்ப்பதற்கு அவர்கள் பயப்படுவார்கள். இது ஒருவித நிற அடிப்படையிலான ரேசிச மனநிலைதான் என்று சொல்லப்படுகிறது. காரணம் இந்த அலியுரோபோபியா ஐரோப்பிய நாடுகளில்தான் அதிக மனிதர்களுக்கு உள்ளது.
மீள்வது எப்படி?
இந்த நோய்க்கூறு உடையவர்கள் மீள்வது என்பது சுய முயற்சியின் விளைவால்தான் மீள முடியும். செயற்கை முறையில் மீள்வது கடினம். எண்ணங்களை மாற்றுவதன் மூலம் பல போயியாக்கள் குணமாகியிருக்கின்றன. ஒரு விசயத்தைத் தவிர்க்க வேறு விசயத்தில் பார்வையையும் எண்ணத்தையும் செயலையும் மாற்ற வேண்டும். யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்யலாம். மேலும் இது போலான போபியாக்களுக்கு நீச்சல் பயிற்சி நல்ல பலனைத் தரும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.