மாநில மொழிக்கு பிறகு 2-வது மொழியாக இந்தியை கற்கலாம் என்றே தான் கூறியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பொது மொழி தொடர்பான தனது கருத்தை, அரசியல் கட்சிகள் சில அரசியலாக்குவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். தனது கருத்தை கூர்ந்து கவனித்து, பிறகு, விமர்சிக்குமாறு அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். இந்தி பேசாத மாநிலத்தை சேர்ந்த தனக்கும் இந்தி 2-வது மொழி தான் என்று கூறிய அவர், இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று, தான் ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறினார்.
மாநில மொழிக்கு பிறகு கற்கும் மொழியாக இந்தி இருக்கலாம் என்றே தான் கூறியதாகவும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.