சாலை பணியாளரிடம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கைது!

அரூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் குப்புசாமி தனது மகள் திருமணத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுப்பதற்காக பாலக்கோடு பகுதியிலுள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் குப்புசாமியின் பணத்தை விடுவிக்காமல் இளநிலை உதவியாளர் தனபால் என்பவர் 15 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குப்புசாமி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தன் பெயரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தனபாலனிடம் கொடுக்க முயன்ற போது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்ததோடு, கண்காணிப்பாளர் சந்திரசேகரையும் கைது செய்தனர்.

Exit mobile version