பனங்காட்டு படை கட்சித் தலைவர் ஹரி நாடார் கைது!

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட ஹரி நாடாருக்கு 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பனங்காட்டு படை கட்சித் தலைவர் ஹரி நாடாரை பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021 மே மாதம் ஒரு குற்ற வழக்கில் கைது செய்து பெங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து ஹரி நாடாருக்கு எதிரான மற்றொரு புகாரை விசாரித்த தமிழக காவல்துறையினர், பெங்களூரு மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்த ஹரி நாடாரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.YouTube video player

Exit mobile version