விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர் உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டது. அதன் சிறப்பம்சங்கள் என்ன தற்போது காணலாம்.
2008ம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, ரஷ்யாவின் கசன் நிறுவனத்திடம் 130 கோடி ரூபாய் மதிப்பில், Mi-17V-5 வகையை சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த வகை ஹெலிகாப்டர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள Mi-8 ஹெலிகாப்டரில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. 2013ம் ஆண்டு இந்த வகை ஹெலிகாப்டர் பாதுகாப்புத்துறையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த வகை ஹெலிகாப்டர் ராணுவ போக்குவரத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
அனைத்து காலநிலைகளிலும், குறிப்பாக மோசமான வானிலையிலும் சமாளித்து பறக்கக் கூடிய Mi-17V-5 ஹெலிகாப்டரில், மூன்று விமானிகள் மற்றும் 36 பேர் வரை பயணம் செய்யலாம். 13 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது Mi-17V-5 வகை ஹெலிகாப்டர்.
4 ஆயிரத்து 500 கிலோ எடைகள் கொண்ட ஆயுதங்களை, இதில் கொண்டு செல்ல முடியும். இரட்டை எஞ்சினை கொண்ட இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.
தரையில் இருந்து 6 ஆயிரம் மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடிய இந்த ஹெலிகாப்டரின் பெரிய அறை 12 புள்ளி 5 மீட்டர் பரப்பளவு கொண்டது. வீரர்களையும், சரக்குகளையும் விரைவாக உள்வாங்குவதற்கும், வெளியேறுவதற்கும் கதவுகள் உள்ளன.
Shturm-V ஏவுகணைகள், S-8 ராக்கெட்டுகள், 23 மில்லி மீட்டர் இயந்திர துப்பாக்கிகள, PKT துப்பாக்கிகள் மற்றும் AKM துப்பாக்கிகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
Discussion about this post