கோவையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாதையாக இருந்து வந்த பொள்ளாச்சி – திண்டுக்கல் ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு தற்போது கோவையிலிருந்து திண்டுக்கல் மார்க்கமாக மதுரை வரை ரயில்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க சோதனை ஓட்டம் திண்டுக்கலில் இருந்து போத்தனூர் வரை நடைபெற்றது. இதில் ஒரு எஞ்சினுடன் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூர் வரை 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post