சென்னை அம்பத்தூரில் பட்டப்பகலில் உயர் ரக சைக்கிள் திருட்டு

சென்னை அம்பத்தூரில் பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் உயர்ரக சைக்கிளை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அம்பத்தூரை அடுத்துள்ள பட்டவாக்கம் பெரியார் நகரில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன், தனது வீட்டின் முன்பு சைக்கிளை நிறுத்தி இருந்தார். இந்த நிலையில், வீட்டில் யாருமில்லாத நேரத்தை நோட்டமிட்ட மர்ம ஆசாமி ஒருவர் சைக்கிளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் சைக்கிளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version