வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநில ரயில்நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அரியானா மாநிலக் காவல் துறையினருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், தமிழகம், அரியானா, குஜராத் உள்ளிட்ட 6 மாநில முக்கிய ரயில் நிலையங்களில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தது. இது தொடர்பாக அரியானா காவல்துறையினர், தமிழக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்துத் தமிழகத்தில் சென்னை, சேலம், ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post